உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு அகராதி வழங்கல்

மாணவர்களுக்கு அகராதி வழங்கல்

காஞ்சிபுரம் : தமிழ் வளர்ச்சித்துறை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில், காஞ்சிபுரம் பி.டி.வி.எஸ்., துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, நற்றமிழ் அறிவோம் என்னும் துாய தமிழ் அகராதி நேற்று வழங்கப்பட்டது.இதில், அகர முதலி இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் மாணவ - மாணவியருக்கு அகராதியை வழங்கினார்.சுற்றுச்சூழலில் உள்ள வாழ்வியல் சொற்களையும் பொருள் உணர்ந்து தமிழில் பேச வேண்டும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களைத் தமிழில் பொருள் உணர்ந்து, அகராதியில் குறிப்பிட்டுள்ளவாறு சொற்களை பேசி பழக வேண்டும் என, எடுத்துரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ