உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில்களில் பொது விருந்து

கோவில்களில் பொது விருந்து

காஞ்சிபுரம் : முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 55வது நினைவு தினத்தை ஒட்டி, சின்ன காஞ்சிபுரத்தில் அண்ணாதுரையின் நினைவு இல்லத்தில், அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு கட்சியினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து ஹிந்து சமய அறநிலைத் துறை சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி பொது விருந்து நடந்தது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்த சமபந்தி பொது விருந்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பயிற்சி கலெக்டர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அறுசுவை உணவை சாப்பிட்டனர்.இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி, செயல் அலுவலர் முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். வல்லக்கோட்டை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிற்கு, பொது விருந்திற்கு ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். இதையடுத்து, சிறப்பு வழிபாடு நிகழ்வில் பங்கேற்ற 100 பக்தர்களுக்கு கோவில் சார்பில் சேலைகளை வழங்கினார். பின்னர் நடந்த சமபந்தி விருந்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் செய்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் கோமதி, ஊராட்சி துணைத் தலைவர் சிவா எத்திராஜ், உபயதாரர் செந்தில்தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை