உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அய்யன்பேட்டையில் ரதசப்தமி தேரோட்டம் விமரிசை

அய்யன்பேட்டையில் ரதசப்தமி தேரோட்டம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் ரத சப்தமிக்கு தேரோட்டம் நடைபெறும்.நேற்று ரதசப்தமி விழாவை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை 7:00 மணி அளவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை