மேலும் செய்திகள்
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
10 minutes ago
மானாம்பதியில் நுாலக கட்டடம் புதுப்பிப்பு
12 minutes ago
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
13 minutes ago
வாலாஜாபாத்: திம்மையன்பேட்டையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் நான்கு பக்க துாண்களும் சேதம் அடைந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் விபத்து அபாயத்தில் உள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், அய்யம்பேட்டை அடுத்துள்ளது திம்மையன்பேட்டை. இங்குள்ள சின்னத் தெரு பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக அப்பகுதியில் உள்ள பெரிய தெரு, கீழ்த்தெரு, பாரதி தெரு மற்றும் திருவள்ளுவர் தெருக்களில் உள்ள 300 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் கான்கிரீட் துாண்களும் சில ஆண்டுகளாக சேதம் அடைந்து விரிசலாகி வருகிறது. மழை நேரங்களில் சேதமான துாண்களில் ஈரப்பதம் அதிகரிப்பதால் விபத்து ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகாமையில் அங்கன்வாடி மையம் உள்ளதால், குழந்தைகள் நடமாட்டத்தின் போது இடிந்து விழுந்து ஆபத்து ஏற்படும் என குழந்தை களின் பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, திம்மையன்பேட்டை, சின்னத் தெரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான துாண்கள் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
10 minutes ago
12 minutes ago
13 minutes ago