மேலும் செய்திகள்
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
10 minutes ago
மானாம்பதியில் நுாலக கட்டடம் புதுப்பிப்பு
12 minutes ago
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
13 minutes ago
காஞ்சிபுரம்: மாநில அளவிலான செஸ் போட்டி, காஞ்சிபுரத்தில் டிச., 7ம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க சபா சார்பில், மாநில அளவிலான, செஸ் போட்டி, காஞ்சிபுரம் பரந்துார் சாலை, சிறுவள்ளூர் சாலையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில், வரும் 7ம் தேதி நடை பெறுகிறது. இதில், 9, 11, 13, 17 ஆகிய வயதுடையோர் மற்றும் பொது பிரிவினருக்கான போட்டி நடை பெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக ஆண்கள் 20, பெண்கள் 20 பேருக்கு பரிசு மற்றும் கோப்பையும், பொது பிரிவில் 20 பேருக்கு ரொக்க பரிசும், 1 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். மேலும், முதல் பரிசாக 5,000 ரூபாய் முதல், 20வது பரிசாக 600 ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. இதில் 9 - 17 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் பங்கேற்போருக்கு மெடல், சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு பல்லவா சதுரங்க சபாவின் செயலர் ஜோதிபிரகாசத்தை 95002 34581, 99942 93081 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minutes ago
12 minutes ago
13 minutes ago