உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளைஞரை வெட்டி பைக் பறித்த சிறுவர்கள்

இளைஞரை வெட்டி பைக் பறித்த சிறுவர்கள்

குன்றத்துார்:படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி, மோச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 30; வெல்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா யூனிக்கான்' பைக்கில் செரப்பணஞ்சேரி - --மோச்சேரி சாலையில் சென்றார்.அப்போது, மாதவனை வழிமறித்த மர்ம நபர்கள் மூவர், கத்தியால் வெட்டிவிட்டு, பைக்கை பறித்துச் சென்றனர். காயமடைந்த மாதவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இதுகுறித்த புகாரை விசாரித்த மணிமங்கலம் போலீசார், நாவலுார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை