மேலும் செய்திகள்
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
11 minutes ago
மானாம்பதியில் நுாலக கட்டடம் புதுப்பிப்பு
13 minutes ago
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
14 minutes ago
சென்னை: கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம், பணம் பெற்ற மகளிர் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்திற்கு, கடந்த மாதம் சென்ற 28 வயது பெண், ஒரு புகார் அளித்தார். விதவையான தனக்கும், வாலிபர் ஒருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் தான் கர்ப்பமானதாகவும், தன்னை திருமணம் செய்ய மறுக்கும் அந்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், அப்பெண் புகாரில் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக விசாரித்த காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் தாகிரா, 43; பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க, லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவ்வப்போது விசாரணைக்கு வருமாறு கூறி, நேரடியாக 2,000 ரூபாயும், 'ஜிபே' செயலி வாயிலாக 1,500 ரூபாயை, அப்பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், புகார் அளிக்க வந்த பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் பணம் வாங்கிய விவகாரம், உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள், பெண் இன்ஸ்பெக்டர் தாகிராவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்.
11 minutes ago
13 minutes ago
14 minutes ago