உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.6 லட்சம் கஞ்சாவுடன் சிக்கிய திருநங்கையர்

ரூ.6 லட்சம் கஞ்சாவுடன் சிக்கிய திருநங்கையர்

செம்மஞ்சேரி : ஓ.எம்.ஆரில், துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம், நாவலுார் உள்ளிட்ட பகுதிகளில், கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை அதிகரித்தது.செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுண்டீஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா வியாபாரிகள் குறித்து விசாரித்தனர். இதில், பெரும்பாக்கம், எழில் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பது தெரிய வந்தது.சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், 60 கிலோ கஞ்சா சிக்கியது. இதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய். இதையடுத்து, கஞ்சா விற்பனையில் திருநங்கையரான அப்சரா, 27, சுஜி, 32, ஆனந்தி, 36, ரதி, 35, அபி, 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, ஓ.எம்.ஆர்., சுற்றுவட்டார பகுதிகளில் சில்லரை விற்பனை செய்து வந்தனர். ஐந்து பேரையும் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்