மேலும் செய்திகள்
சித்தாத்துாரில் கைப்பந்து போட்டி
5 minutes ago
அனுபவமே சிறந்த ஆசான் வசந்த வாசல் நிகழ்ச்சி
6 minutes ago
நெசவாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்
6 minutes ago
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெருவில், செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் வடிகால்வாய் உள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெருவில், பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் கான்கிரீட் திறந்தவெளி வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், வடிகால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெருவில், மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
5 minutes ago
6 minutes ago
6 minutes ago