உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விதிமீறிய ஆட்டோக்கள் ரூ.54,000 அபராதம்

விதிமீறிய ஆட்டோக்கள் ரூ.54,000 அபராதம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லோகநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜு உள்ளிட்ட போலீசார், நேற்று மாலை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது, 20 ஆட்டோ ஓட்டுனர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், வாகனத்திற்கான உரிமம் புதுப்பிக்காமலும், ஆட்டோ ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதில், எவ்வித அரசு ஆவணங்களும் இன்றி இயங்கிய மூன்று ஆட்டோ, ஓட்டுனர் உரிமம், தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கிய 17 ஆட்டோ என, மொத்தம் 20 ஆட்டோக்களுக்கு, 54,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை