உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கிறது. வழக்கமாக காலை 8:00 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும் .இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. காலை நேரத்தில் கடல் நீர் குறைந்து பாறைகள் வெளியே தெரிகிறது. காலை 10:00 மணிக்கு பின்னர் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து படகு இயக்கும் அளவுக்கு நிலைமை சீராகிறது.இதனால் நேற்றும் நேற்று முன்தினமும் காலை 8:00 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 10:00 மணிக்கு பின்னர் தொடங்கியது. அதிகாலை முதலே இதற்காக வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.பொதுவாக அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் தான் என்று இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை