மேலும் செய்திகள்
சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு
18-Dec-2025
தாயை தாக்கிய தம்பியை கொலை செய்தவர் கைது
11-Dec-2025
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு
08-Dec-2025
நாகர்கோவில்:நாகர்கோவில் வடலிவிளை சுடலை ஆண்டவர் கோவிலில் மார்ச் 1ல் பூஜை நடந்தபோது, படையலில் வைக்கப்பட்டிருந்த மதுவை குடித்த செல்வகுமார், 47, என்பவர் இறந்தார்.அருள், 33, என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோட்டார் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த அஜி என்ற சதீஷ், 48, என்பவரை கைது செய்தனர்.போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:நானும் அருளும், ஒரே கோவிலில் சாமியாடுவோம். கோவில் நிர்வாகம் தொடர்பாக பிரச்னை வந்ததால் எங்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.போது, அருள் என்னை போலியாக ஆடுவதாக கிண்டல் செய்தார். கோவில் படையலில் இருக்கும் மது, தனக்கு தான் வேண்டும் என்று அருள் கேட்டிருந்தார்.இதை தெரிந்து கொண்ட நான், அந்த மதுவில் பூச்சிக்கொல்லிமாத்திரைகளை கலந்தேன்.பூஜை முடிந்ததும் அந்த மதுவை அருள் எடுத்துச் சென்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த செல்வகுமார், மது தனக்கும் வேண்டும் என்று கேட்டார். இருவரும் மது குடித்தனர்.வீட்டுக்குச் சென்ற செல்வகுமார் வாந்தி எடுத்து இறந்தார். அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கூறியுள்ளார்.அஜி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
18-Dec-2025
11-Dec-2025
08-Dec-2025