கரூர், ;' ''பிரதமர் மோடி, பூரண உடல் நலத்துடன் பத-வியை தொடர, கரூரில் அசுவமேத யாகம் நடத்தப்படும்,'' என, தேனி கூடலுார் ஸ்ரீ மகாசக்தி பீடம் மடாதிபதி சுந்தர வடிவேல் சுவாமிகள் தெரிவித்தார்.கரூரில், ஐயப்ப சேவா சங்க திருமண மண்ட-பத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதா-வது:இன்னும், 15 ஆண்டுகளுக்கு, பா.ஜ., ஆட்சிதான். பிரதமர் மோடி வரும், ஐந்தாண்டுகளுக்கு பிரதம-ராக தொடர்வார். அவர் பூரண உடல் நலத்துடன் பதவியை தொடரவும், தமிழகத்தில் வரும், 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்படவும், கரூர் மாவட்ட தொழில் வளர்ச்சிக்காகவும், காவிரி, அமராவதி ஆறுகள் ஒன்று கூடும் இடமாக, கரூர் அருகே திருமுக்கூடலுாரில் அசுவமேத யாகம் நடத்தப்படும்.அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். யாகத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும். தற்போதுள்ள, ஆறு தி.மு.க., அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள். அதேபோல் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்-களும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை படத்தை வைத்து, ஆடு வெட்டிய சம்பவம் கண்டிக்கத்தக்-கது. இதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்க-வில்லை. இது வருத்தமாக உள்ளது.இவ்வாறு கூறினார்.