உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிற்படுத்தப்பட்டோர் கடனுதவி விண்ணப்பிக்க அழைப்பு

பிற்படுத்தப்பட்டோர் கடனுதவி விண்ணப்பிக்க அழைப்பு

கரூர் : பிற்படுத்தப்பட்டோர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினருக்கு, சிறு தொழில்கள் செய்ய கடன் வழங்கப்படுகிறது. மூன்று லட்சத்திற்குள் குடும்ப வருமானம் இருக்க வேண்டும். 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். 2 லட்சம் முதல், 15 லட்சம் வரை பெறலாம். சாதி, வருமானம், மற்றும் பிறப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை