உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு

பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு

குளித்தலை : குளித்தலை அருகே, பணியை செய்ய விடாமல் தடுத்த, பெண் ஊர்ப்புற நுாலகர் மீது வழக்குப்ப-திவு செய்யப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த காணியாளம்பட்டியில், ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில் குன்னச்சத்திரத்திலிருந்து புற நுாலகர் செந்தில்குமார், 44, மாவட்ட நுாலக அலுவலரின் செயல்முறை ஆணையின்படி, இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த, 9ம் தேதி காணியாளம்பட்டி நுாலகத்தில் ஊர்ப்புற நுாலக-ராக பணியில் இருந்து வந்தார். இங்கு பணியில் இருந்த புதுார் சுக்காம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி, 42, என்பவர் சின்னப்பனையூர் ஊர்ப்-புற நுாலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்-பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் நுாலகர் செந்தில்கு-மாரை பணி செய்யவிடாமல் தடுத்தும், நுாலகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அரசு பணி செய்ய விடாமல் உமா மகேஸ்வரி இடையூறு செய்துள்ளார்.இது தொடர்பாக, செந்தில்குமார் கொடுத்த புகார்-படி, நுாலகர் உமா மகேஸ்வரி மீது, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arivarasupandian T
ஜூலை 17, 2024 11:39

மேற்சொன்ன புகாரும் அதன் மீதான நடவடிக்கையும் ஒரு மோசடி செயலை மறைப்பதற்காக அரசு நிர்வாகத்தில் உள்ள உச்ச பட்ச அதிகாரிகள் செய்ய்ய்யப்பட்ட கூட்டு நடவடிக்கையாகும். சிவகுமார் என்பவர் கரூர் மாவட்ட நூலக அலுவலர் அதிகாரத்தை செலுத்த வேண்டுமானால், சிவகுமார் பள்ளி கல்வி செயலரின் ஒரு முறையான உத்தரவின்படிதான் கரூர் மாவட்ட அலுவலரின் அதிகாரத்தை செலுத்த முடியும். அது போன்ற உத்தரவு சிவகுமாரிடம் இல்லை. இந்த உத்தரவை வழங்குமாறு கேள்வி கேட்ட நிலையில், தனது மோசடி மாவட்ட நூலக அலுவலக அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள சிவகுமார் மாவட்டம் சார்ந்த உயர் அலுவளர்களின் தூண்டுதலின் பேரில் நடத்திய நாடகம் தான் உமாமகேஷ் என்பவர் மீது அளித்த பொய் புகாரும், அதன் பொருட்டான கைது நடவடிக்கைகளும். நடக்கும் இந்த ஆட்சியில் கீழ் நிலை பணியாளர்கள் யாதொருவரூக்கும் பனி பாதுகாப்பு இல்லை. இம்மோசடி புகாரின் உண்மை நிலை வெகு விரைவில் வெளிச்சத்திற்கு வரும். அது சமயம் ஊடவகவியலாளர்கள்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி