உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

கரூர் மாவட்டத்தில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

கரூர் : கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்-டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இன்று காலை 10.00 மணி முதல், 3.00 வரை, அரவக்குறிச்சி வட்டாரத்திற்குட்பட்ட கொடையூர், நாகம்பள்ளி, புங்கம்பாடி (கிழக்கு), புங்கம்பாடி (மேற்கு), வெஞ்சமாங்கூடலுார் (மேற்கு), ஆகிய பஞ்சாயத்துகளுக்கு மலைக்கோவிலுார் துர்கைஅம்மன் திருமண மண்டபத்திலும், க.பரமத்தி வட்டாரத்திற்குப்பட்ட அத்-திப்பாளையம், குப்பம், முன்னுார், தென்னிலை மேற்கு, தென்-னிலை கிழக்கு, புன்னம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு, தென்-னிலை கிழக்கு பஞ்., அலுவலகத்திலும், கடவூர் வட்டாரத்திற்-குட்பட்ட கடவூர் சமுதாய கூடத்திலும் நடக்கிறது.கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்குட்பட்ட கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கினம் ஆகிய பஞ்.,களுக்கு கொசூர் சமுதாயக்கூடத்-திலும், குளித்தலை வட்டாரத்திற்குப்பட்ட ரணியமங்கலம், சத்தி-யமங்கலம், திம்மம்பட்டி ஆகிய பஞ்.,களுக்கு அய்யர்மலை அபிமஹால் திருமண மண்டபத்திலும், தான்தோன்றிமலை வட்-டாரத்திற்குட்பட்ட ஜெகதாபி, மணவாடி ஆகிய பஞ்.,களுக்கு சின்னமநாயக்கன்பட்டி எஸ்.கே.பி., மஹாலிலும், கரூர் வட்டா-ரத்திற்குட்பட்ட நஞ்சை புகழூர், திருக்காட்டுத்துறை, வேட்டமங்-கலம், கோம்புபாளையம் ஆகிய பஞ்.,களுக்கு வேட்டமங்கலம் அம்மையப்பன் மண்டபத்திலும், தோகைமலை வட்டாரத்திற்-குட்பட்ட சேப்ளாப்பட்டி, ஆர்ச்சம்பட்டி, முதலைப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு சேப்ளாப்பட்டி சமுதாயக்கூடத்திலும், மக்க-ளுடன் முதல்வர் முகாம் நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் மனு அளிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி