உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 35 பயணிகளை காப்பாற்றி மயங்கிய அரசு பஸ் டிரைவர்

35 பயணிகளை காப்பாற்றி மயங்கிய அரசு பஸ் டிரைவர்

குளித்தலை: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையை சேர்ந்தவர் அன்பு, 41; அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று மதியம், அரசு பஸ்சில், ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு, 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டி-ருந்தார். மாலை, 4:15 மணியளவில், லாலாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, திடீரென டிரைவர் அன்பு மயக்கமடைந்தார். ஆனால், அதற்கு முன் சுதாரித்த அன்பு, சாலையோரம் பஸ்சை பத்திரமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, மயங்கிய டிரைவர் அன்பை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர். அந்த பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ் வரவழைத்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பரப-ரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை