உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் 132 பேர் எழுதிய வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு

கரூரில் 132 பேர் எழுதிய வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு

கரூர்:டி.என்.பி.எஸ்.சி., சார்பில் விரைவில், குரூப்-4 வி.ஏ.ஓ., பதவிக்கான போட்டி தேர்வு நடக்க உள்ளது. அதற்காக, கரூர் மாவட்ட நுாலகங்களில், புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு, மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.நேற்று, கரூர் மாவட்டத்தில், கரூர் நகரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில், 62 பேரும், முழுநேர கிளை நுாலகங்கள் குளித்தலையில், 30 பேரும், கிருஷ்ணராய புரத்தில், 19 பேரும், அரவக்குறிச்சியில், எட்டு பேரும், தோகமலை ஊர்ப்புற நுாலகத்தில், 13 பேர் உள்பட, 132 மாணவ, மாணவியர், வி.ஏ.ஓ., தேர்வுக்கான மாதிரி தேர்வை எழுதினர். தகவலை மாவட்ட மைய நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை