உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே

பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், பிலாறு வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்-தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் வழியாக மகாதானபுரம், நந்தன் கோட்டை, சிந்தலவாடி வழியாக பிலாறு வாய்க்காலில் தண்ணீர் கலக்கிறது. வாய்க்காலில் மழை காலங்களில் வரும் மழை நீர் மற்றும் விவ-சாய நிலங்களுக்கு செல்லும் பாசன நீர் செல்கிறது. தற்போது வாய்க்காலின் பல இடங்களில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்-துள்ளது. இதனால் தண்ணீர் செல்லும் போது தடை ஏற்படுகிறது. மழை காலங்களில் வரும் மழை நீர் செல்வதில் சிரமம் ஏற்ப-டலாம். எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை