உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டம், மேயர் கவிதா தலைமையில் நடந்தது. துணை மேயர் தாரணி சரவணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:பூங்கோதை (தி.மு.க.,): வெங்கமேடு திட்டச்சாலையில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தாமதமாகிறது.மாநகராட்சி அதிகாரி கார்த்திக்: கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளை, விரைவாக முடிக்குமாறு கான்ட்ராக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் முடிக்கவில்லை என்றால், ஒப்பந்தம் மறுபரீசிலனை செய்யப்படும்.சக்திவேல் (தி.மு.க.,): வார்டு நிதியாக, ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அதில், கூட பணிகள் நடக்கவில்லை.சரண்யா தேவி (தி.மு.க.,): பாரதியார் நகரில் சிறுபாலத்தில் உடைப்பு உள்ளது. சின்டெக்ஸ் தொட்டிகளில் குழாய்கள் உடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரி ரவி: சின்டெக்ஸ் தொட்டிகள் சில இடங்களில் மாற்றப்பட்டுள்ளது. பழைய குழாய்கள் மாற்றப்படும்.மேயர் கவிதா: 33வது வார்டு வஞ்சுலீஸ்வரர் கோவில் பகுதியில், குழாய்கள் சேதம் அடைந்துள்ளது. அதை மாற்றும்படி, நானே சொல்லியுள்ளேன். வேலை நடக்கவில்லை. சிறு, சிறு பிரச்னைகளை சரி செய்யும்படி, சி.எம்., மிடமா கேட்க முடியும்.அருள்மணி (தி.மு.க.,): ராமானுார் முதல் சுங்ககேட் முதல், குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளது.மேயர் கவிதா: கொளந்தானுார் பகுதியில், புதிய கழிப்பிடம் திறக்கப்படாமல் உள்ளது. எதற்காக திறக்காமல் வைத்துள்ளீர்கள்.மாநகராட்சி அதிகாரி ரவி: புதிய கழிப்பிடத்தில், பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.நிர்மலா தேவி (தி.மு.க.,): கழிவுநீர் வாய்க்காலில், சாக்கடை கழிவுகளை அகற்றுவது இல்லை.மண்டல தலைவர் அன்பரசன்: எனது வார்டிலும், சாக்கடை கழிவுகளை உடனுக்குடன் அள்ளுவது இல்லை.கமிஷனர் சுதா: ஒவ்வொரு வார்டிலும், மாஸ் கிளினிங் நடக்கிறது. அதை மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் சேர்ந்து செய்து கொள்ளலாம்.ஸ்டீபன் பாபு (காங்.,): குடிநீர் திறந்து விடுவதில் நிறைய பிரச்னை உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.யசோதா (தி.மு.க.,): எனது வார்டில், தனிநபர் ஒருவர் தன்னிச்சையாக, பைப் லைன் போட்டுள்ளார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேயர் கவிதா: தன்னிச்சையாக பைப் லைன் போட்ட, நபர் மீது அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திராணி (தி.மு.க.,): எனது வார்டில் மூன்று போர்வெல்லும் பழுதடைந்துள்ளது.மேயர் கவிதா: போர்வெல்கள் சரி செய்யப்படும்.வசுமதி (தி.மு.க.,): கல்விக்குழு சம்பந்தமான தீர்மானம் உள்ளது. அதுகுறித்து, எந்த தகவலும் முன்கூட்டியே வரவில்லை.சரஸ்வதி (தி.மு.க.,): எனது வார்டில் உள்ள, மண் சாலைகளை, தார் சாலைகளாக மாற்ற வேண்டும்.மாநகராட்சி அதிகாரி ரவி: டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில், தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தண்டபாணி (மா.கம்யூ.,): துாய்மை பணியாளர்களுக்கு, அதிக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலுசாமி (தி.மு.க.,): எனது வார்டில், மூன்று மாதங்களாக குடிநீர் வரவில்லை. லாரிகள் மூலம், தண்ணீர் சப்ளையும் முழுமையாக செய்ய, அதிகாரிகளால் முடியவில்லை.மேயர் கவிதா: மாநகராட்சியில் உள்ள தண்ணீர் சப்ளை செய்யும் வாகனங்கள், அவற்றின் நிலை குறித்து, உடனடியாக அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.முன்னதாக சாதாரண கூட்டத்தில், 43 தீர்மானங்கள், அவரச கூட்டத்தில், 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை