கரூர் : கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த வட்டியில் பொருளாதார மேம்பாட்டிற்கு டாப்-செட்கோ கடன், தாட்கோ கடன் போன்றவை செயல்படுத்தப்படு-கிறது. இதில் நாளை (4ம் தேதி) காலை 10:00 மணி முதல், 5:00 மணி வரை, 26 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் மேளா நடக்கி-றது. அதில், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புகளூர், வாங்கல், எல்.என்.சமுத்திரம், மேலப்பாளையம், சின்னதாரா-புரம், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, ஈசநத்தம், கருப்பபிள்ளை-புதுார், வைகநல்லுார், டி.மருதுார், இனுங்கூர், தோகைமலை, கீழவெளியூர், கூடலுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மணவாசி, டி.மாமரத்துப்பட்டி, பி.உடையாப்பட்டி, சுண்டுகுழிப்பட்டி, காணியாளம்பட்டி, விராலிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கரூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் குளித்தலை கூட்டுறவு நகர வங்கியில் கடன் மேளா நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.