உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்டைக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள்

வெண்டைக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கோவக்-குளம் பகுதி விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது வெண்டைக்காய் செடிகளில், பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. செடிகளில் இருந்து காய்கள் பறிக்கப்பட்டு உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்று வருகின்-றனர். வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்-படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை