உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கரூர்: அமராவதி ஆற்றங்கரையோரத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில், தொடர் கனமழை பெய்து வருவதால், கரூர் மாவட்ட ஆற்றங்கா-ரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் நீர் மட்டம் நேற்று காலை, 10:00 மணிக்கு, 84.20 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு வினாடிக்கு, 6,344 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீர்-வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அமராவதி ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்துவிட வாய்ப்புள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகை படங்கள் எடுப்பதையோ, முற்-றிலும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை