உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டு வெல்லம் விலை சரிவு

குண்டு வெல்லம் விலை சரிவு

கரூர்: கரூர் மாவட்டத்தில், வேலாயுதம்பாளையம், நொய்யல், மர-வாப்பாளையம், சேமங்கி, முத்தனுார், கவுண்டன்புதுார், குளத்-துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், நடையனுார், புகளூர், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல் உள்-ளிட்ட பகுதிகளில், குண்டு வெல்லம், அச்சு வெல்லம் ஆகி-யவை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்-திரா, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு விற்ப-னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த வாரம், 30 கிலோ கொண்ட குண்டு வெல்லம், அச்சு வெல்லம் ஒரு சிப்பம், 1,300 ரூபாய்க்கு விற்றது. நடப்பு வாரம், குண்டு வெல்லம், 50 ரூபாய் குறைந்து, 1,250 ரூபாயாகவும், அச்சு வெல்லம், 100 ரூபாய் குறைந்து, 1,200 ரூபாய்க்கும் விற்-பனையானது.ஆடி மாதம் கிராமங்களில், திருவிழாக்கள் காரணமாக வெல்லம் விலை அதிகரித்தது. நடப்பு வாரம் தேவை குறைந்-ததால், சுப விசேஷங்கள் இல்லாததால், வெல்லம் விலை சற்று குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ