உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எம்.எஸ்.எம்.இ., சட்டத்தில் திருத்தம் தேவை: மத்திய அமைச்சருக்கு கடிதம்

எம்.எஸ்.எம்.இ., சட்டத்தில் திருத்தம் தேவை: மத்திய அமைச்சருக்கு கடிதம்

கரூர்;மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., சட்டத்தில் முக்கியமான திருத்தம் தேவை என, கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் சங்க தலைவர் ஆர். தனபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கரூர் நகரில் இருந்து கைத்தறி மற்றும் விசைத்தறியினால் தயாரிக்கப்பட்ட துணிகள், மதிப்பு கூட்டப்பட்ட துணிகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள எம்.எஸ்.எம்.இ., 43-பி (எச்) சட்டம் சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்களை பாதுகாக்கவே என்பதை வரவேற்கிறோம். இந்த சட்டப்படி, எம்.எஸ். எம்.இ.,ல் உள்ள சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு, 45 நாட்களுக்குள் வியாபாரிகள் பணம் செலுத்த வேண்டும். நாட்டில் ஜவுளி வியாபாரிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை, எங்களை போன்ற சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்களிடம், ஜவுளியை கடனாக பெற்று விற்பனை செய்கின்றனர். 30 நாட்கள் முதல், 120 நாட்கள் கடனாக பெற்று பணம் செலுத்தி வருகின்றனர்.மத்திய அரசின் புதிய சட்டப்படி, பெரிய வியாபாரிகள், 45 நாட்களில் பணம் கொடுத்து விடுவார்கள். ஆனால், சிறிய வியாபாரிகள்தான், 45 நாட்களில் பணம் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதனால், வட மாநில வியாபாரிகள், எம்.எஸ்.எம்.இ., இல்லாத உற்பத்தியாளர்களிடம் இருந்து சரக்கு துணிகளை வாங்க ஆரம்பித்து விட்டனர். ஆர்டரும் தருகின்றனர்.அதற்கு காரணம் புதிய சட்டத்தில் உள்ள, 50 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள், டிரேடர்ஸ் நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ.,ல் இல்லாத நிறுவனங்களுக்கு, 45 நாட்களுக்குள் பணம் செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கிறது. இதனால், இந்த மூன்று ஷரத்துக்களை நீக்க வேண்டும். அதற்கு மாறாக, பணம் செலுத்தும் காலத்தை, 90 நாட்களாக திருத்தம் செய்து, அனைத்து வியாபாரிகளுக்கும், ஒரே சட்டத்தை கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை