உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கேரளா வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள்

கேரளா வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள்

அரவக்குறிச்சி, -கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் நடந்தது. அரவக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியை, அரவக்குறிச்சி ரோட்டரி சங்க தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். மேலும், அரவக்குறிச்சி ரோட்டரி சங்க உறுப்பினர்கள், போலீசார், தீயணைப்புத்துறை அதிகாரிகள், அரவக்குறிச்சி ஆறுமுகம் பள்ளி தாளாளர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், பள்ளப்பட்டியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள், கேரளா மாநிலம், கல்பட்டு என்ற இடத்தில் அரசு நடத்திய முகாமில் ஒப்படைக்கப்பட்டது. கேரளா மாநிலம், வயநாடு மாவட்ட உதவி கலெக்டர் அனிதா மற்றும் கல்பட்டு தாசில்தார் யேசுதாஸ் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை