உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை

புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை

கரூர்: கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி வாய்க்காலில், தேங்கியிருக்கும் புதர்களை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து, ராஜ வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இதன் மூலம், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெல், கரும்பு, வாழை, கோரைப்புல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வாய்க்கால்களின் உள்பகுதியில் ஆகாய தாமரை, கருவேல முட்செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழைய வீடுகளில் இருந்து பெறப்படும் கட்டட கழிவுகள், வாய்க்கால்களை அடைத்து தண்ணீர் செல்ல முடியாதபடி காணப்படுகிறது. தற்போது கோடை என்பதால், வாய்க்கால்களை துார்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எவ, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை