குளித்தலை: குளித்தலை, காவிரி நகரில் உள்ள கிராமியம் கூட்டரங்கத்தில், குளித்தலை மக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், சுதந்திர தின விழா, காமராஜர் பிறந்த நாள் விழா, சங்கத்தின், 12ம் ஆண்டு நிறைவு விழா என, முப்பெரும் விழா நடந்தது.மக்கள் நல வாழ்வு சங்க தலைவர் கிராமியம் நாராயணன் தலைமை வகித்தார்.குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, ஓய்வுபெற்ற டி.எஸ்.பி., மாணிக்கம், வக்கீல் கிருஷ்ணமாச்சாரி, ரத்தினவேலு, முன்னாள் ஆர்.டி.ஓ., மாயவன், திருச்சி அன்பில் தர்மலிங்கம், காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வலையப்பட்டி ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் கருப்பண்ணன், மக்கள் நலவாழ்வு சங்க பொருளாளர் ராமஜெயம் ஆகியோர், விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர். திருச்சி என்.ஆர்., ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் விஜயபாலயன், திருச்சி ரானா மருத்துவமனையின் இருதய டாக்டர் செந்தில்-குமார் நல்லுசாமி ஆகியோர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, புத்தகங்கள் வழங்கினர்.தொடர்ந்து, இன்றைய சமுதாய கல்வி மற்றும் பொருளாதாரம், விவசாயம், இதயத்தை எப்படி கண்காணித்தல், உணவு பழக்கவழக்கம், உடல் பயிற்சி, உடல்நலம் பேணுதல் குறித்தும் விரிவாக பேசினர்.இதில் பலர் கலந்து கொண்டனர்.