உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கும்பாபிஷேக விழாவில் பேனர் கிழிப்பு மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

கும்பாபிஷேக விழாவில் பேனர் கிழிப்பு மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்., அம்பேத்கர் நகரில், நேற்று முன்தினம் காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபி-ஷேக விழா நடந்தது. இதற்காக, பொதுமக்கள் சார்பில் பல இடங்களில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது. இதில், இனுங்கூர் - நங்கவரம் செல்லும் ராணி மங்கம்மாள் நெடுஞ்-சாலை, பொய்யாமணி பஸ் ஸ்டாப்பில் வைக்கப்பட்டிருந்த, மிகப்பெரிய டிஜிட்டல் பேனரை, அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்-பினர் கிழித்து சேதப்படுத்தினர்.இதையறிந்த, கிராம மக்கள், இளைஞர்கள், நேற்று காலை, 9:00 மணியளவில், பேனரை கிழித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்-போது, டிஜிட்டல் பேனரை கிழித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.தொடர்ந்து, பஞ்., தலைவர் பாலன், யூனியன் குழு முன்னாள் தலைவரும், குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலாளருமான தியாகராஜன் தலைமையில், பொய்யாமணி பஞ்., அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஒரு தரப்பை சேர்ந்த-வர்கள், மன்னிப்பு கேட்டனர்.இதையடுத்து, தொடர்ந்து பிரச்னை ஏற்படாமல் தடுக்க, மக்கள் வைக்கப்பட்ட பேனரை தாங்களாகவே எடுத்துக் கொள்ள-வேண்டும் என, போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. குளித்-தலை போலீசார், 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை