உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்

கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே கார் மீது, டூவீலர் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூர் ஷாம் ரெசிடென்சி 3வது ப்ளோர் பகுதியை சேர்ந்தவர் அல் அமீன், 49. இவர் நேற்று கரூர் - திண்டுக்கல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.அரவக்குறிச்சி தடாகோவில் பிரிவு அருகே வந்தபோது, எதிர் திசையில் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம் திருமலைசாமிபாளையத்தை சேர்ந்த காளிமுத்து, 40, செல்லையா, 55, ஆகியோர் டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அல்அமீன் ஓட்டி வந்த கார் மீது, டூவீலர் மோதியது.இதில் டூவீலரை ஓட்டி வந்த காளிமுத்து, பின்னால் அமர்ந்து வந்த செல்லையா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அல்அமீன் அளித்த புகார்படி, டூவீலரை ஓட்டி வந்த காளிமுத்து மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்