உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மானிய விலையில் கோழி குஞ்சுகள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மானிய விலையில் கோழி குஞ்சுகள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கரூர் கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு, 40 கோழிக்குஞ்சுகள் வீதம், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன. தேர்வு செய்யப்பட்ட பெண் ஏழையாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன், 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், பதிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி முந்தைய ஆண்டுகளில் கறவை மாடு, ஆடு, செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில், 30 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை வரும், 23க்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி