உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அருகே, பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.சின்னதாராபுரம் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில், சிலர் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல்படி, சின்ன தாராபுரம் எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய கோபிநாத், வினோத், சரத்குமார், ரஞ்சித் குமார், அரவிந்த், பாலமுரு கன், வெங்கடேசன், பூபதி, சங்கர், சதீஷ்குமார், சரவணன், சந்தானம் ஆகிய, 12 பேரையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 7,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை