உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 50 வயது மதிக்கத்தக்க நபர் வாகனம் மோதி உயிரிழப்பு

50 வயது மதிக்கத்தக்க நபர் வாகனம் மோதி உயிரிழப்பு

குளித்தலை, குளித்தலை அடுத்த மகாதானபுரம் பிரிவு சாலை, திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த, 11- மாலை, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் மயங்கி கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த, 15 அதிகாலை, 4:30 மணிக்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, சிந்தலவாடி வி.ஏ.ஓ., முரளிதரன், 41, கொடுத்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை