உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, தேங்காய் மட்டைகளை ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.அரவக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன், லாரி ஓட்டுனராக பணிபுரிகிறார். இவர், அரிகாரன்வலசு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு தாராபுரம் செல்வதற்காக, அரிகாரன்வலசு பகுதியில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் தீ பற்றி-யது.இதையறிந்த சுப்பிரமணியன் லாரியை நிறுத்தி, அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்-திற்கு வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். விரைந்து செயல்பட்ட அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்களால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை