உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை தேவை

அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை தேவை

கரூர் : கரூர் அமராவதி ஆற்றில், கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.அமராவதி ஆறு, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் தொடங்கி கரூர், திருமுக்கூடலுார் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. தற்போது கோடையால் வறட்சி நிலவி வருவதால், கரூர் அமராவதி ஆறு மணற்பாங்காக உள்ளது. மேலும் குடிநீருக்காக ஆற்றில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலும் நீர்மட்டம் குறைந்திருப்பதால், தற்போது ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இது தவிர, ஆற்றில் மணல் திருட்டும் நடப்பதால் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது.கரூரில் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றில் கழிவுநீரை வெளியேற்றுவதில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெளியேறும் கழிவுநீர் நேரடியாக, அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றுப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. லைட்ஹவுஸ் கார்னர் அமராவதி பாலம், பசுபதிபாளையம் பாலத்தில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றம் காரணமாக பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, கரூரின் நீராதாரமான அமராவதி ஆற்றில், கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை