உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்ணைமலை கோவில் பிரச்னை அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்

வெண்ணைமலை கோவில் பிரச்னை அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்

கரூர்: கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவி-லுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக ஆக்கிர-மிப்பில் உள்ளது. இந்த இடங்களை மீட்க கோரி, உயர்நீதி--மன்றம் மதுரை கிளையில், சேலம் திருத்தொண்டர் சபை நிறு--வனர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலை-யத்துறைக்கு நீதி-மன்றம் உத்தரவிட்டது. அதன்படி மீட்பு நடவ-டிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், அங்குள்ள பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடு-பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக, வெண்ணைமலையில் அனைத்துக்கட்சி மற்றும் பொதுமக்கள் நல அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், காங்.,-எம்.பி., ஜோதிமணி, அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், தி.மு.க., கரூர் ஒன்றிய செயலர்கள் வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை