| ADDED : டிச 10, 2025 10:13 AM
அரவக்குறிச்சி: கலை பண்பாட்டுத் துறை சார்பாக, ஜவகர் சிறுவர் மன்றம் நடத்திய, மாவட்ட அளவிலான குரலிசை போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்-பாக, ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக மாண-வர்களுக்கான, நுண்கலைத்திறன் போட்டி கரூரில் நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநி-லைப்பள்ளி, 4ம் வகுப்பு மாணவர் முகமது ஷாகிர் குரலிசை போட்டியில் மாவட்ட அளவில் முத-லிடம் பெற்றார். முகமது ஷாரிக், பவுசிகா, மகிமா ஆகியோர் ஓவிய போட்டியிலும், அபிரக் ஷனா பரதநாட்டியத்திலும் பங்கேற்பு சான்றிதழ் பெற்-றனர்.வெற்றி பெற்ற மாணவர் முகமது ஷாரிக்குக்கு, தமிழ் பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் கேடயம் வழங்கியதோடு, அரசுப்-பள்ளி மாணவர்கள் நுண்கலையில் சிறந்து விளங்குவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று பாராட்டினார். சான்றிதழை ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா, பவுலின் செபாஸ்டின் மேரி வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களை வட்டாரக்கல்வி அலுவலர் சகுந்-தலா, தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ஆகியோர் பாராட்டினர்.