உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாய இடு பொருட்கள் விற்பனை கரூரில் குவிந்த பீஹார் தொழிலாளர்கள்

விவசாய இடு பொருட்கள் விற்பனை கரூரில் குவிந்த பீஹார் தொழிலாளர்கள்

கரூர், பொங்கல் பண்டிகையையொட்டி, விவசாய இடுபொருட்களை விற்பனை செய்ய, பீஹார் மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள், கரூரில் குவிந்துள்ளனர்.தமிழர்களின் முக்கிய பண்டிகையான, பொங்கல் வரும் ஜன., 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. அப்போது, விவசாய பணிகளுக்கு தேவைப்படும், இரும்பிலான இடுபொருட்களை விவசாயிகள் புதிதாக வாங்குவது வழக்கம்.இதனால், பீஹார் மாநிலத்தில் இருந்து, 30க்கும் மேற்பட்ட இரும்பு இடு பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கரூரில் குவிந்துள்ளனர். தான்தோன்றிமலை, புலியூர், வெங்கமேடு, வெள்ளியணை, வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட இடங்களில், பீஹார் மாநில தொழிலாளர்கள் சாலையோரம் புதிதாக கடை வைத்துள்ளனர். அதில் கத்தி, கடப்பாறை, மம்மட்டி உள்ளிட்ட விவசாய பணிளுக்கு தேவைப்படும் பொருட்களை, உடனடியாக தயார் செய்து கொடுக்கின்றனர்.குறைந்தபட்சம், 300 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாய் வரை பல்வேறு இரும்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இரும்பை நெருப்பில் வாட்டி, பொருட்கள் கண் எதிரே தயார் செய்யப்படுவதால், பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை