உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூடிக்கிடக்கும் கழிப்பறை பொது மக்கள் சிரமம்

மூடிக்கிடக்கும் கழிப்பறை பொது மக்கள் சிரமம்

தான்தோன்றிமலை: கரூர் அருகே, கருப்பம்பாளையம் சாலை காமராஜர் நகரில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், கழிப்பிடம் பல மாதங்களாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகாலை நேரத்தில் திறந்த வெளியிடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தி கொண்டு அவதிப்படுகின்றனர். மேலும், மூடப்பட்-டுள்ள கழிப்பிடத்தின் கட்டடமும், பழுதடைந்து வருகிறது. இதனால், காமராஜர் நகர் பகுதியில் சுகாதார கேடும், தொற்று நோய் பரவுவதை தடுக்க, இந்த கழிப்பிடத்தை உடனடியாக திறக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்