உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கலெக்டர் அலுவலக லிப்ட் பழுது 6 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு

கலெக்டர் அலுவலக லிப்ட் பழுது 6 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக, 'லிப்ட்' பழுதாகி பாதியில் நின்றது, அதில், 6 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் வேட்பு மனு பரிசீலனை, நேற்று நடந்தது. இதில், அரசு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என பல்வேறு தரப்பினர் பணியாற்றினர். அதில், மதியம், 2:30 மணிக்கு முதல் மாடியில் இருந்து கீழே வந்த, 'லிப்ட்' திடீரென பழுதாகி பாதியில் நின்றது. அதில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என, 6 பேர் மாட்டிக் கொண்டனர்.பின், 'லிப்ட்' பழுது பார்க்கும் பொறியாளர் சாவியை கொண்டு வந்து திறந்து பத்திரமாக அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை மீட்டார். கடந்தாண்டு அதே, 'லிப்ட்' பழுதாகி, 5 பேர் மாட்டிக் கொண்டனர். பின், தீயணைப்பு துறையினர், 'லிப்டி'ன் கதவை திறந்து மீட்டனர். இங்கு, அடிக்கடி, 'லிப்ட்' பழுதடைந்து வரும் நிலையில், புதிய, 'லிப்ட்' மற்ற வேண்டும் என, அதிகாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை