உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் தொடர் மழை

கரூர் மாவட்டத்தில் தொடர் மழை

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பஞ்சப்பட்டியில் அதிகப்பட்சமாக, 40 மி.மீ., மழை பெய்தது.தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், கரூர் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை, பல இடங்களில் நேற்று அதிகாலை வரை விட்டு, விட்டு பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) க.பரமத்தி, 1.2, குளித்தலை, 8.4, தோகமலை, 2.4, கிருஷ்ணராயபுரம், 21, மாயனுார், 6, பஞ்சப்பட்டி, 40, கடவூர், 20, பாலவிடுதி, 29, மயிலம்பட்டி, 12.2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 11.68 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ