உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே பாலம் தரைத்தளம் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ரயில்வே பாலம் தரைத்தளம் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்: கரூர் - சேலம் பழைய சாலையின் குறுக்கே, ஈரோடு மற்றும் சேலம் ரயில்வே வழித்தடத்தில், 24 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. 2021ல் இரண்டு ரயில்வே வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தரைத்தளத்தில் சேதம் அடைந்துள்ளது. அதை நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டு விட்டனர். தற்போது, பாலத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, சேதம் அடைந்த பகுதிகள் உள்ளது.குறிப்பாக, இரவு நேரத்தில் உயர்மட்ட பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சேதம் அடைந்துள்ள விபரம் தெரியாமல், விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வெங்கமேடு ரயில்வே உயர்மட்ட பாலத்தில், சேதம் அடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை