உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை:குளித்தலை அருகே, கல்லுாரி சென்ற மகள் வீடு திரும்பாததால், அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.குளித்தலை அடுத்த கழுகூரை சேர்ந்தவர் ரெட்டைமலை, 45, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் தமயந்தி, 19, அய்யர்மலை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில் பி.காம்., சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை வழக்கம் போல, கல்லுாரி பஸ்சில் கல்லுாரிக்கு சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போனை, தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து தந்தை கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தமயந்தியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !