உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொய்யாமணியில் டிஜிட்டல் பேனர் கிழிப்பு; இருதரப்பினரிடையே மோதலால் பதற்றம்

பொய்யாமணியில் டிஜிட்டல் பேனர் கிழிப்பு; இருதரப்பினரிடையே மோதலால் பதற்றம்

குளித்தலை: கோவில் கும்பாபிஷேக விழாவில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை கிழித்ததால், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10க்கு மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்., அம்பேத்கர் தெருவில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 12ல் நடந்தது. விழாவில், பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் டிஜிட்டல் பேனர் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. இந்த டிஜிட்டல் பேனரை, அன்று இரவு அதே ஊரை சேர்ந்த மற்-றொரு தரப்பினர் கிழித்து சேதப்படுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த விழாக்குழுவினர், சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து, மூன்று சமூகத்தை சேர்ந்த பொது மக்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இனி-வரும் காலங்களில், கிராமத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என, முடிவு செய்யப்பட்-டது.இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணியளவில் அம்பேத்கர் தெருவை சேர்ந்த, இரண்டு வாலிபர்கள் டீ கடைக்கு சென்றுள்-ளனர். அப்போது டிஜிட்டல் பேனரை கிழித்த மற்றொரு தரப்-பினர், தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதையறிந்து அங்கு வந்த அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பின-ருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில், அம்பேத்கர் தெருவை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பொது மக்கள், கொலை வெறி தாக்குதல் நடத்-தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்-கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அசம்பாவிதத்தை தவிர்க்க, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாது-காப்புக்கு குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவு-கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ