உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 30ல் மாணவியருக்கான மாவட்ட தடகள போட்டி

30ல் மாணவியருக்கான மாவட்ட தடகள போட்டி

கரூர், மாணவியருக்கான, கரூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி வரும், 30ல், தான்தோன்றிமலை அரசு விளையாட்டு அரங்கில் நடக்கிறது.இதுகுறித்து, கரூர் மாவட்ட தடகள சங்க தலைவர் செல்வம், செயலாளர் பெருமாள் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாணவியருக்கான தடகள போட்டிகளை மாவட்ட அளவில் நடத்தி வருகிறது. அதன்படி, கரூர் மாவட்ட அளவிலான, மாணவியருக்கான தடகள போட்டி வரும், 30ம் தேதி தான்தோன்றிமலை அரசு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதில், 14, 16 வயதுக்குட்பட்ட மாணவியர் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 94434-10009, 97510-03607, 96556-97755 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை