உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் போதை பொருள் ஒழிப்பு ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி

குளித்தலையில் போதை பொருள் ஒழிப்பு ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி

குளித்தலை, குளித்தலையில், லயன்ஸ் சங்கம் சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.தனியார் பள்ளி தாளாளர் ரம்யா, இன்ஸ்பெக்டர் கருணாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். காந்தி சிலையிலிருந்து பேரணி துவங்கி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வழியாக சுங்ககேட் நான்கு வழிச்சாலையில் முடிவுற்றது.பேரணியில் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள், போதை பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். லயன்ஸ் மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், குளித்தலை லயன்ஸ் சங்க தலைவர் ரபிக்தீன், செயலாளர் தாமோதரன், கிராமியம் நிறுவனர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை