உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் சிமென்ட் நிறுவன கட்டுமான பணி நிறுத்தக்கோரி விவசாயிகள் சங்கம் மனு

தனியார் சிமென்ட் நிறுவன கட்டுமான பணி நிறுத்தக்கோரி விவசாயிகள் சங்கம் மனு

கரூர்: 'தனியார் சிமென்ட் நிறுவன கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலர் ராஜா, கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட தென்னிலை மேல்பாகம் பகுதி, வானம் பார்த்த பூமியாக உள்ளதால் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். தற்போது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அவ்வப்போது பெய்யும் மழையில் கால்நடை தீவனங்களை பயிரிட்டு வருகின்றனர். இங்கு, பல கல்குவாரிகள் செயல்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வசிக்க இயலாத பகுதியாக மாறி வருகிறது.இந்நிலையில், தென்னிலை மேல்பாகத்தில், புதிய சிமென்ட் நிறுவனம் தொடங்க கட்டட பணிகள் நடக்கிறது. இங்கு, கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது என, பல முறை மனு அளிக்கப்பட்டது. இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தனியார் சிமென்ட் நிறுவனத்தின் கட்டட பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இங்கு, சிமென்ட் ஆலை தொடங்கினால், காற்று, தண்ணீர் போன்றவைகள் மாசு ஏற்பட்டு கால்நடைவளர்ப்பு, விவசாயம் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை