உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

குளித்தலை: குளித்தலையில், அறுவடைக்கு முன்பாகவே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை அடுத்த மாயனுார் காவிரி கதவணையில் இருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், பழைய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால், தென்கரை பாசன வாய்க்கால் மூலம், விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு ஆங்காங்கே அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதில், மாயனுார் முதல் லாலாப்பேட்டை, குளித்தலை, நங்கவரம், நெய்தலுார், முதலைப்பட்டி உள்ளிட்ட வாய்க்கால் பாசன பகுதிகளில் அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் அறுவடை செய்த பின், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு பதிலாக, முன்கூட்டியே அமைக்க வேண்டும்.மேலும், கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறந்தால், இடைத்தரகர்களிடமிருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் பாதுகாத்து கொள்ளலாம். எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை