உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

அமராவதி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

கரூர்: அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கேரளா மாநிலம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு வரும், தண்ணீரின் அளவு கடந்த, ஒரு வாரமாக அதிக-ரித்துள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 184 கன அடியாக, தண்ணீர் வரத்து இருந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 62.50 அடியாக இருந்தது. இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என, கரூர் மாவட்ட, விவசா-யிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை