உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் உழவர் பெருவிழா

அரவக்குறிச்சியில் உழவர் பெருவிழா

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் ஆலமரத்துப்பட்டி கிராமம், ஆண்டிபட்டி கோட்டை பகுதி விவசாயிகளுக்கான உழவர் விழா நடந்தது.அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா பேசுகையில்,'' வேளாண் விரிவாக்க மையத்தில் சோளம், கம்பு, கொள்ளு, உளுந்து, பாசிப்பயறு, நெல் விதைகள் மற்றும் தார்ப்பாலின் ஆகிய பொருட்கள் இருப்பில் உள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களை கொடுத்து, தேவைப்படும் இடுபொருட்களை, 50 சதவீத மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு, அதனை கட்டுப்படுத்தும் முறை, தென்னை நுண்ணுாட்டங்கள் குறித்து, வேளாண்மை அலுவலர் கவுதமி விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து பள்ளப்பட்டி கால்நடை மருத்துவர் இளம்பரிதி, விவசாயிகளுக்கு கால்நடை துறையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினார். விழாவிற்கு அழைத்து வந்த கால்நடைகளுக்கு, குடல் புழு நீக்கம் மற்றும் இதர தடுப்பூசி அளிக்கப்பட்டது. வேளாண் விற்பனை, சந்தைப்படுத்துதல் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் விளக்கம் அளித்தார். வேளாண் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் சுவாதி, விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை, மண்புழு உரம் தயாரித்தல், பஞ்சகாவியம் தயாரித்தல், காளான் வளர்ப்பு தொடர்பாக பேசினார்.பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் கலைச்செல்வன், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ரசிகப்ரியா, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் காளீஸ்வரி ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை, வட்டார தொழில் நுட்ப மேலாளர் சோனியா,உதவி தொழில்நுட்ப மேலாளர் மதன் மற்றும் பிரபாகரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை